
05 Nov 1933 - 05 Jun 2025 (Age 91)
கச்சேரி கிழக்கு, Sri Lanka
யாழ். சுண்டுக்குழி கச்சேரி கிழக்கு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouverவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை விஜயரட்ணம் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று Vancouver நகரில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் சின்னத்துரை மாணிக்கம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் காந்தர் சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும் ஆவார்.
தையல்நாயகி (இளைப்பாறிய Nurse, யாழ். போதனா வைத்தியசாலை) அவர்களின் ஆருயிர்க் கணவராகவும்,
புஷ்பலதா(லதா), விஜயரூபன்(கண்ணன்), தாரணி(ஜெயந்தி), வாசுகி(விஜயா) ஆகியோரின் பாசமிகு தந்தையாகவும் திகழ்ந்தார்.
கணேஷானந்தா, ரேணுகா, தர்ஷன், பவா(ராஜ்ஜெயரட்ணம்) ஆகியோரின் அன்பு மாமனாராகவும்,
லாவன்யா, லக்ஷனா, லக்ஷமி, வொபீனா, அஷ்வீனா, அஜிஸ், டினாக்ஷன், ஜெசிக்கா, ஜொஷாந் ஆகியோரின் ஆசைப் பேரனாகவும் விளங்கினார்.
காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை பொன்னுத்துரை, மனோன்மணி, வரதராஜா மற்றும் தவலக்ஷ்மி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரராவார்.
Vancouver இல் வசிக்கும் யோகரட்ணம், யோகமனோகரன்(ஜெயா), ஜெயமனோகரி(ராசாத்தி), தர்மரட்னம், ஸ்ரீகரன், ரவீந்திரன், மஞ்சுளா(New York), சியாமளா(Germany), கெங்காதரன்(Jaffna), பாஸ்கரன்(Germany) ஆகியோரின் தாய்மாமனாரும்,
Vancouver இல் வசிக்கும் நாகேஸ்வரன்(ஈசன்), நாகேஸ்வரி(உமா), ரதி(Germany), வாசன்(Jaffna), கேதீஸ்வரன்(அப்பன்- Chavakachcheri), சுபாஷ்(Chavakachcheri), ரவி(France), குமார்(London) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
விஜயரட்ணம் அவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.